'விடுதலை' பட ஹீரோ சூரி... காதலில் உருக வைக்கும் காட்டு மல்லி வீடியோ பாடல் வெளியானது!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'விடுதலை' படத்தில் இடம்பெற்றிருந்த காதல் பட பாடலான, காட்டு மல்லி வீடியோ பாடல்,  தற்போது வெளியாகி ரசிகர்களால் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.
 

First Published Apr 20, 2023, 9:36 PM IST | Last Updated Apr 20, 2023, 9:36 PM IST

உன்னதமான கதைகளையும், நாவல்களையும், உயிரோட்டமான திரைப்படமாக இயக்குவதில் கை தேர்ந்தவர் இயக்குனர் வெற்றிமாறன். ஜெயமோகன் எழுதிய துணைவன் என்கிற சிறுகதையை, தழுவி வெற்றிமாறன் இயக்கியுள்ள திரைப்படம் தான் விடுதலை.

இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ள இந்த படத்தில், பல முன்னணி நடிகர்களுடன் காமெடி வேடத்தில் நடித்து பிரபலமான, சூரி முதல் முறையாக ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். இவருக்கு ஜோடியாக பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ கதாநாயகியாக நடித்துள்ளார். 

இந்த திரைப்படம் வெளியானதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில். விமர்சன ரீதியாகவும்.. வசூல் ரீதியாகவும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. மேலும் இந்த படத்தில் ஹீரோவாக போலீஸ் கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்துள்ள சூரிக்கும்,  மக்கள் போராளியாக, பெருமாள் வாத்தியார் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்திக்கும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. 

தாப்ரோது இப்படத்தின் இரண்டாம் பாசத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், விடுதலை படத்தில், இசைஞானி இளையராஜா இசையில் உருவான காட்டு மல்லி வீடியோ பாடல் வெளியாகி, அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Video Top Stories