விடுதலை 2 ட்ரைலர் வெளியீடு; மேடையில் வைத்து சூரியை கலாய்த்து தள்ளிய இளையராஜா!

Ilayaraja Tease Soori : இன்று நடைபெற்ற விடுதலை படத்தில் 2ம் பாக ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் சூரியை கலாய்த்துள்ளார் இளையரஜா.

First Published Nov 26, 2024, 11:52 PM IST | Last Updated Nov 26, 2024, 11:52 PM IST

இன்று மாலை சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில், பிரபல நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் வெளியாகவுள்ள விடுதலை படத்தின் 2ம் பாக இசை மற்றும் ட்ரைலர் வெளியானது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் பலரும் பங்கேற்றனர். அப்போது`பேசிய இப்படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா, சூரி என்று நான் சொன்னது ஏன் யாருமே கத்தவில்லை என்று சூரியிடம் கேட்க. சூரி எழுந்து நீங்கள் இருக்கும்போது எப்படி அய்யா என்று கேட்டார். உடனே நீங்கள் இப்பொது 2 படங்களில் நாயகனாக நடிக்கிறீர்கள், ஆனால் உங்களை ஹீரோவாக அறிமுகம் செய்தது வெற்றிமாறன் என்பதை எப்போதும் மறக்கக்கூடாது என்று கூறினார்.

Video Top Stories