Asianet News TamilAsianet News Tamil

பெருமாள் வாத்தியாராக மிரட்டும் விஜய் சேதுபதி..! சூரியின் வேற லெவல் நடிப்பில் வெளியான 'விடுதலை' ட்ரைலர்!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ள விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.
 

First Published Mar 8, 2023, 8:52 PM IST | Last Updated Mar 8, 2023, 8:53 PM IST

இயக்குனர் வெற்றிமாறன் தொடர்ந்து தரமான கதையம்சம் கொண்ட படங்களை மட்டுமே இயக்கி வரும் நிலையில், காமெடி நடிகர் சூரியை  முதல் முறையாக கதாநாயகனாக வைத்து இயக்கியுள்ள திரைப்படம் விடுதலை. இந்த படத்தில், விஜய் சேதுபதி மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் மார்ச் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இந்த படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று மிக பிரம்மாண்டமாக நடந்தது.

பல கட்ட போராட்டங்களுக்கு பின்னர் 'விடுதலை' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், இப்படத்தின் முதல் பாகத்தின் டிரைலரை தற்போது பட குழு வெளியிட்டுள்ளது. இதில் பெருமாள் வாத்தியாராக உள்ள விஜய் சேதுபதி மக்கள் படை வளர்ச்சியின் தலைவராக இருக்கிறார். எனவே அவரை கைது செய்ய வேண்டும் என மிகப் பெரிய போலீஸ் படையை உருவாகிறது. இதில் பல போலீஸ் அவரை கைது செய்ய செல்லும் நிலையில், சூரி எடுப்பு வேலைகளை மட்டுமே பயன்படுத்த படுகிறார்.

மற்ற போலீசை போலவே தானும் மக்கள் படை தலைவனான விஜய் சேதுபதியை பிடிக்க வேண்டும் என்று சூரியெடுக்கும் முயற்சிகள் இப்படத்தில் ட்ரைலரில் காட்டப்பட்டுள்ளன. மேலும் சக போலீஸ் அதிகாரி ஒருவர் அனைத்து போலீசுக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் அதுவரை பொறுத்து இருக்க வேண்டும் என சூரியிடம் கூறும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. அதேபோல் அந்த கிராமத்தில் உள்ள பெண்களை போலீசார் துன்புறுத்தும் பொது அதைக் கண்டு சூரிய ன் பொங்கி எழும் காட்சிகளும் உள்ளது.

யூகிக்க முடியாத திருப்புமுனைகளுடன் வெளியாகி உள்ள இந்த படத்தின் டிரைலர் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Video Top Stories