Watch : ஆக்ரோஷமான வெற்றிமாறன்... பயங்கரமாக அடிவாங்கிய சூரி - மிரள வைக்கும் ‘விடுதலை’ மேக்கிங் வீடியோ

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் விடுதலை படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

First Published Mar 27, 2023, 12:53 PM IST | Last Updated Mar 27, 2023, 12:53 PM IST

வெற்றிமாறன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் விடுதலை. இதில் சூரி கதையின் நாயகனாகவும், விஜய் சேதுபதி கதாநாயகனாகவும் நடித்துள்ளனர். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இப்படம் வருகிற மார்ச் 31-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. அதற்கான புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், விடுதலை படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த வீடியோ மூலம் இப்படத்திற்காக படக்குழுவினர் எந்த அளவுக்கு கஷ்டப்பட்டு உள்ளனர் என்பதை கண்முன் கொண்டுவந்து நிறுத்தி உள்ளனர். குறிப்பாக வெற்றிமாறன் ஆக்ரோஷமாக கத்துவதும், சூரி ஆக்‌ஷன் காட்சிகளில் பயங்கரமாக அடிவாங்கி நடித்துள்ளதும் இந்த மேக்கிங் வீடியோவில் இடம்பெற்று உள்ளது.

Video Top Stories