யங் லுக்கில் மிரட்டும் விஜய் சேதுபதி; வெற்றிமாறனின் விடுதலை பார்ட் 2 - ட்ரைலர் இதோ!

Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கத்தில் பலரும் எதிர்பார்த்த விடுதலை படத்தின் 2ம் பாக ட்ரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.

Share this Video

கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகி உள்ளது. பிரபல இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். விடுதலை படத்தின் தொடர்ச்சியாக சில காட்சிகளும், விஜய் சேதுபதி ரங்கன் வாத்தியாராக மாறியது எப்படி? என்பது குறித்த பகுதிகளும் இந்த இரண்டாம் பாகத்தில் இடம்பெறவிருக்கிறது. இளையராஜா இசையில் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் தற்பொழுது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Related Video