"என் மகன் கலக்கிட்டார்" விஜய் குறித்து நெகிழ்ச்சி பேச்சு - எஸ்.ஏ. சந்திரசேகர் வீடியோ வைரல்!

Thalapathy Vijay : பிரபல இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் தனது மகன் தளபதி விஜய் குறித்து நெகிழ்ச்சியாக சில விஷயங்களை பேசியுள்ளார்.

Share this Video

தளபதி விஜய் தன்னுடைய அரசியல் மாநாட்டில் பேசிய பல விஷயங்கள் பொதுமக்களாலும் பல்வேறு அரசியல் தலைவர்களாலும் பெரிய அளவில் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தளபதி விஜயின் தந்தை, மற்றும் பிரபல இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர், பிரபல தொகுப்பாளி ஒருவரோடு இணைந்து வெளியிட்ட வீடியோவில் தன்னுடைய மகனின் அந்த அரசியல் பேச்சு தனக்கு ஆச்சரியத்தை தருவதாக கூறியுள்ளார். தன்னுடைய மகன் அசத்தலான ஒரு சொற்பொழிவை கொடுத்திருப்பதாகவும் பேசி இருக்கிறார் அவர். விஜய் மிகச் சிறந்த நடிகர் என்பது எனக்கு தெரியும். ஆனால் இவ்வளவு சிறந்த பேச்சாளர் என்பதே எனக்கு இப்போது தான் தெரியும். அவர் மனதில் அவ்வளவு வேகம் இருக்கிறது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்று கூறி தன்னுடைய மகனை பூரித்து பாராட்டி இருக்கிறார் எஸ்.ஏ. சந்திரசேகர்.

Related Video