'வெந்து தணிந்தது காடு' படத்தில் மதுஸ்ரீ பாடிய மல்லிப்பூ வீடியோ பாடல் வெளியானது..!
நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவோடு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த படத்தில் இடம்பெற்ற 'மல்லிப்பூ' பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள கேங் ஸ்டார் படமான, 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் ஒரு தரப்பினர் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், மற்றொரு தரப்பினர் ஆஹா... ஓஹோ.. என கொண்டாடி வருகிறார்கள். இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான அனைத்து பாடல்களுக்குமே நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக மதுஸ்ரீயின் இனிமையான குரலில் வெளியான 'மல்லிப்பூ' பாடல் வேற லெவலுக்கு கொண்டாடப்பட்டது.
தற்போது இந்த பாடலின் விடீயோவை படக்குழு வெளியிட்டுள்ளது. வெளியான சில மணி நேரங்களிலேயே இந்த பாடல் ஆயிரக்கணக்கான ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது.