watch : யுவன் - இளையராஜா சேர்ந்து இசையமைத்த ‘கஸ்டடி’ படத்தின் காதல் பாடல் இதோ

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்துள்ள கஸ்டடி படத்தில் இடம்பெறும் டைம்லெஸ் லவ் என்கிற காதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Share this Video

மாநாடு படத்தின் வெற்றிக்கு பின்னர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் கஸ்டடி. இப்படத்தில் தெலுங்கு நடிகர் நாகசைதன்யா நாயகனாக நடித்துள்ளார். அவர் நடிக்கும் முதல் தமிழ் படம் இதுவாகும். அதுமட்டுமின்றி இப்படத்தின் மூலம் இயக்குனர் வெங்கட் பிரபு தெலுங்கில் இயக்குனராக களமிறங்க உள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கஸ்டடி படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்து உள்ளனர். அவர்கள் சேர்ந்து இசையமைத்த டைம்லெஸ் லவ் என்கிற காதல் பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை கபில் கபிலன் பாடி உள்ளார். இப்பாடல் வரிகளை மதன் கார்க்கி எழுதி உள்ளார்.

Related Video