"என்ன யாராலும் தடுக்க முடியாது" புதிய லீடராக வரும் தளபதி விஜய் - சர வெடியாக வெடிக்கும் GOAT ட்ரைலர்!

GOAT Trailer : வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து விரைவில் வெளியாகவுள்ள "கோட்" படத்தின் டிரைலர் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Share this Video

வருகின்ற செப்டம்பர் 5ம் தேதி உலக அளவில் தளபதி விஜயின் "கோட்" திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், இன்று அந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகி உள்ளது. தளபதி விஜயின் 68வது திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம், லைலா, சினேகா மற்றும் மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

மேலும் வில்லனாக மிரட்டியுள்ளார் மூத்த தமிழ் திரை உலக நடிகர் மைக் மோகன். 3 வெவ்வேறு கதாபாத்திரங்களில் தளபதி விஜய் இந்த திரைப்படத்தில் தோன்ற உள்ளார் என்பது ட்ரெய்லர் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அசத்தலான சண்டை காட்சிகளும், வெங்கட் பிரபுவுக்கே உரித்தான சில அட்டகாசமான விஷயங்களும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது. 

Related Video