திருநெல்வேலியை திரும்பிப் பார்க்க வைத்த 'எதிர்நீச்சல்' வேல ராமமூர்த்தி பேத்தியின் திருமணம்! வீடியோ

பிரபல எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தியின் பேத்தி வைஷ்ணவி மற்றும் இன்டஸ்ட்ரியலிஸ்ட் ஆர் எஸ் முருகனின் மகன் விஜய ராகுலுக்கும் நடந்த திருமணம் தான் தற்போது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் ஹார்ட் டாப்பிக்காக உள்ளது.
 

First Published Nov 27, 2024, 9:30 PM IST | Last Updated Nov 27, 2024, 9:30 PM IST

பிரம்மாண்டத்தை மிஞ்சும் விதத்தில், ஒவ்வொன்றையும் தன்னுடைய மகனுக்காகவும், மருமகளுக்காகவும் பார்த்து பார்த்து செய்துள்ளனர் தொழிலதிபர் எம் எஸ் முருகனின் குடும்பத்தினர். பல்லாக்கில் பெண் அழைப்பு மற்றும் மாப்பிள்ளை அழைப்பில் துவங்கி, மருமகளுக்கு தங்க ஜரியில் நெய்யப்பட்ட ரூ.8 லட்ச ரூபாய் புடவை, அதற்கு மூன்று லட்சம் ரூபாயில் ஜாக்கெட் என அசத்தியுள்ளார்.

அதேபோல் வேல ராமமூர்த்தியின் பேத்தி வைஷ்ணவி, சுமார் 600 சவரன் தங்க நகையில் மின்ன... தன்னுடைய மகன் மற்றும் மருமகளுக்கு தங்க மாலை போட்டு ஒட்டுமொத்த தமிழகத்தை மிரள வைத்துள்ளனர் எம் எஸ் முருகன் குடும்பத்தினர்.

சுமார் 25 ஆயிரம் பேர் வந்து செல்லும் அளவுக்கு திருமண மண்டபம் கிடைக்காது என்பதால், திருநெல்வேலி டிரேட் சென்டரில் பிரம்மாண்ட திருமண மண்டப செட் போட்டு பல லட்சம் ரூபாய் மதிப்பில் திருமண மண்டபம் செட் அமைத்து இந்த திருமணம் நடந்துள்ளது. ஏராளமான அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டுள்ள இந்த திருமணம் நடந்து ஒரு வாரம் ஆகும் நிலையில், தற்போது அதிகம் கவனிக்கப்படும் திருமணமாக இது மாறியுள்ளது.