Veeran: திரையரங்கில் சக்கை போடு போடும் 'வீரன்' படத்தின் சூப்பர் காமெடி சீன்! ஸ்னீக் பீக் வீடியோ..

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும், வீரன் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
 

First Published Jun 6, 2023, 8:26 PM IST | Last Updated Jun 6, 2023, 8:26 PM IST

இரண்டு வருட இடைவெளிக்கு பின்னர் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் திரைப்படம் 'வீரன்'. சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில், 'மரகத நாணயம்' படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. சூப்பர் ஹீரோ கதையம்சத்தில் நீண்ட நாட்களுக்கு பின் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வரும் இப்படம், முதல் வாரத்திலேயே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்றுள்ளது.

இந்த படத்தில் ஆதிரா ராஜ், முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளது மட்டும் இன்றி, ஹிப்ஹாப் தமிழா ஆதி இப்படத்திற்கு இசையமைத்தும் உள்ளார். தீபக் டி மேனன், ஒளிப்பதிவில்...: ஜி.கே. பிரசன்னா, படத்தொகுப்பு பணிகளை செய்துள்ளார்.

இப்படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டும் விதத்தில் அவ்வப்போது படக்குழு மாஸான காமெடி சீன் ஒன்றின், வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Video Top Stories