வீரன் கோயிலை எவன் இடிக்க வந்தாலும் வீரன் வருவான்..! ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'வீரன்' ட்ரைலர் வெளியானது!

மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே. சரவன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்கும் ‘வீரன்’ திரைப்படத்தின்ட்ரைலர் வெளியானது.
 

Share this Video

சத்யஜோதி ஃபிலிம்ஸ், யூத் ஐகான் ஹிப்ஹாப் தமிழா ஆதி மற்றும் ‘மரகத நாணயம்’ புகழ் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன் ஆகியோர் ஒன்றிணைந்திருக்கும் ‘வீரன்’ படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தில் இருந்து வெளியான, முதல் சிங்கிள் 'தண்டர்காரன்' ஏற்கனவே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதோடு, எதிர்பார்ப்புகளையும் அதிகரித்துள்ளது. ஹிப்ஹாப் தமிழா இப்படத்தில் ஒரு கிராமத்து இளைஞராக நடித்துள்ளார். மேலும்ஆதிரா ராஜ், முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஹிப்ஹாப் தமிழா ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தீபக் டி மேனன், ஒளிப்பதிவில்...: ஜி.கே. பிரசன்னா, படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். ஜூன் 2, ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Video