விக்ரமின் ஆக்ஷன் விருந்து - வைரலாகும் வீர தீர சூரன் டிரெய்லர்
அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், துஷாரா விஜயன் நடிப்பில் உருவாகியுள்ள வீர தீர சூரன் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
சீயான் விக்ரம் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் வீர தீர சூரன். சித்தா பட இயக்குனர் அருண் குமார் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் விக்ரம் ஜோடியாக துஷாரா நடித்துள்ளார். இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி உள்ளது. இப்படத்தின் மாஸான டிரெய்லர் யூடியூப்பில் வெளியாகி உள்ளது.
வீர தீர சூரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தான் முதலில் ரிலீஸ் ஆக உள்ளது. வருகிற மார்ச் 27ந் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, சூரஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
வீர தீர சூரன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. அதில் விக்ரம், ஜிவி பிரகாஷ் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதில் அப்படத்தின் டிரெய்லரும் வெளியிடப்பட்டது.