Chiyaan Vikram 62: ஆரம்பமே அளப்பறைதான்.. சீயான் விக்ரமின் 'வீர தீர சூரன்' படத்தின் டைட்டில் டீஸரே வேற லெவல்!

நடிகர் விக்ரமின் 58-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவர் நடிக்க உள்ள 62 ஆவது படத்தின் டைட்டில் டீசரை தற்போது பட குழு வெளியிட்டுள்ளது.
 

Share this Video

நடிகர் விக்ரம் தன்னுடைய 62 ஆவது படத்தை இயக்குனர் எஸ் யூ அருண்குமார் இயக்கத்தில் நடிக்கிறார். தங்கலான் படத்திற்கு பின்னர், யாரும் எதிர்பார்க்காத ஜானரில் 'தூள்' பட கெட்டப்பில் விக்ரம் நடிக்கும் இந்த படத்தை ரியா சிபு தயாரிக்கிறார்.

ஏற்கனவே இப்படம் குறித்த தகவல் டீசருடன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது டைட்டில் டீசரை படக்குழு விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளது. மேலும் இப்படத்திற்கு 'வீர தீர சூரன்' என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய. பிரசன்னா ஜிகே படத்தொகுப்பு செய்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள இந்த டீசரே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டி உள்ளதாக ரசிகர்கள் கூறி கூறி வருகின்றனர்.

Related Video