நான் வாய்ப்பு தேடி பிக்பாஸ் வீட்டிற்குள் போகல... வேற காரணம்? வனிதாவின் முன்னாள் காதலனை இறக்கிய பிக்பாஸ்!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது துவங்கியுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியை தற்போது 5 ஆவது போட்டியாளராக உள்ளே சென்றுள்ளார் ராபர்ட் மாஸ்டர்.
 

Share this Video

நடன இயக்குனரான ராபர்ட் மாஸ்டரை பொறுத்தவரை, அவர் பல பிரபலங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதே போல் ஹீரோ, இயக்குனர், தயாரிப்பாளர் என்று பன்முக திறமைகளை சினிமாவில் வெளிப்படுத்தி உள்ளார். 

இவர் பிக்பாஸ் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய, நடிகை வனிதா விஜயகுமாரின் முன்னாள் காதலரும் ஆவர். வனிதாவை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் வாய்ப்பு தேடி வரவில்லை, அக்கா, தங்கை, நண்பர்கள் போன்ற உறவை தேடி மட்டுமே வந்துள்ளதாகவும்... நான் யார் பேச்சையும் கேட்கமாட்டேன் நான் நானாகத்தான் இருப்பேன் என கூறி பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்துள்ளார். இவரை பற்றிய புரோமோ இதோ... 

Related Video