Video: முன்னாள் காதலன் ராபர்ட்டுக்கு மிஸ்ஸசாக மாறும் வனிதா விஜயகுமார்! அட காரணம் ஜோவிகா தானா?

வனிதா விஜயகுமார் ராபர்ட்டுக்கு புரபோஸ் செய்தது போன்ற புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதன் பின்னணி குறித்த சீக்ரெட்டை அவரே ரிவீல் செய்துள்ளார்.

manimegalai a  | Updated: Oct 5, 2024, 8:59 AM IST

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத பிரபலமாக இருக்கும் வனிதா விஜயகுமார், தற்போது முன்னாள் காதலர் ராபர்ட்டுக்கு மிஸ்ஸஸ் ஆகும் தகவலை ஒரு புதிய புரோமோவுடன் வெளியிட்டுள்ளார். கடந்த மாதம் வனிதா விஜயகுமார் மற்றும் ராபட் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை போடப்பட்ட நிலையில், இவர்கள் இருவரும் மீண்டும் ஒன்றாக நடிப்பது மிகவும் பரபரப்பாக பார்க்கப்பட்டது.

இதை தொடர்ந்து வனிதா ராபட்டுக்கு முட்டி போட்டு புரபோஸ் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு... அக்டோபர் 5-ஆம் தேதியை குறித்து வைத்து கொள்ளுங்கள் என கூறப்பட்டது. மேலும் சரியாக 12:00 மணிக்கு இருவரும் Mr & Mrs ஆக உள்ள தகவலை வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். அதாவது வனிதா - ராபர்ட் நடிக்கும் புதிய படத்தின் பெயர் தான் Mr & Mrs. இந்த படத்தை வனிதாவே எழுதி - இயக்கும் நிலையில், ஜோவிகா தயாரிக்க உள்ளார்.

Read More...

Video Top Stories