'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' வடிவேலு பாடியுள்ள பணக்காரன் செகண்ட் சிங்கிள் பாடல் வெளியானது!
வைகை புயல் வடிவேலு 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில் பாடியுள்ள பணக்காரன் பாடல் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
நீண்ட இடைவெளிக்கு பின், வைகை புயல் வடிவேலு ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'. முழுக்க முழுக்கா காமெடியை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தை, தலைநகரம் பட இயக்குனர் சுராஜ் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் ஷிவானி, ஷிவாங்கி போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணிகள் படு தூளாக நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியான முதல் சிங்கிள் பாடலான 'அப்பத்தா' பாடல் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, தற்போது இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது.
வடிவேலு பாடியுள்ள 'பணக்காரன்' சிங்கிள் பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் மிக பிரமாண்டமாக இந்த படத்தை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.