Asianet News TamilAsianet News Tamil

'அப்பத்தா' பாடலில் தீபிகா படுகோன்... பூஜா ஹெக்டே...! டான்சில் பொளந்து கட்டிய வைகை புயல்..! வீடியோ

வைகை புயல் வடிவேலு, நீண்ட இடைவேளைக்குப்பின் ஹீரோவாக நடித்துள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகி உள்ளது.
 

First Published Nov 14, 2022, 8:21 PM IST | Last Updated Nov 14, 2022, 8:21 PM IST

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் வடிவேலு இல்லாத முன்னணி நடிகர்களின் படங்களை பார்ப்பது மிகவும் அரிது. அந்த அளவிற்கு தன்னுடைய அழுத்தமான காமெடியாலும், உடல்மொழியாலும் ரசிகர்களை சிரிக்க வைத்து வந்தவர். ரஜினிகாந்த், விஜய், போன்ற நடிகர்கள் முதலில் நடிகர் வடிவேலுவிடம் கால்ஷீட் வாங்கிக் வைத்து கொள்ளுங்கள் என்று இயக்குனரிடம் கூறிய காலமும் உண்டு.

இவர் ஹீரோவாக நடித்து வெளியான 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' திரைப்படம் வெற்றி பெற்றதால், காமெடி வேடங்களில் நடிக்கும் படங்களை தவிர்த்து தொடர்ந்து ஹீரோ சப்ஜெக்ட் படங்களை தேர்வு செய்து நடிக்க தொடங்கினார். ஆனால் 23ஆம் புலிகேசி படத்தின் வெற்றிக்குப் பின்னர், வடிவேலு ஹீரோவாக நடித்த எலி, தெனாலிராமன், போன்ற படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது. மேலும் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு நடித்து வந்த '24 ஆம் புலிகேசி' திரைப்படத்தில் நடிகர் வடிவேலு ஒத்துழைக்கவில்லை என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த பிரச்சனை பூதாகரமானது.

இந்த பிரச்சனையின் காரணமாக தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவுக்கு ரெட் கார்டு வழங்கியதால், பல படங்களில் நடிக்கும்  வாய்ப்பை இழந்தார். ஒருவழியாக அந்த பிரச்சனை கடந்தாண்டு சுமூகமாக முடிந்த நிலையில், வடிவிலும் மீண்டும் ஹீரோவாக கம்பேக் கொடுத்துள்ளார். 

வடிவேலு தற்போது நடித்திருக்கும் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்தை சுராஜ் இயக்கியுள்ளார். இதில் வடிவேலுடன் இணைந்து பிக்பாஸ் ஷிவானி, குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி, காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி போன்ற பலர் நடித்துள்ளனர். மிகவும் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில், விரைவில் இந்த படம் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் வடிவேலு... நடன புயல் பிரபு தேவா நடன அசைவில், ஆடி உள்ள அப்பத்தா பாடல் வெளியாகி உள்ளது. 

வடிவேலு... தீபிகா படுகோன், அனுஷ்கா சர்மா, ஊர்வசி ரவுதலே, பூஜா ஹெக்டே போன்ற நடிகைகளுடன் போஸ்டரில் ரொமான்டிக்காக இருப்பது போல் தோன்றியுள்ளார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.  தற்போது வெளியாகி உள்ள அப்பத்தா பாடல் இதோ...

Video Top Stories