Decent Aana Aalu song: வைகை புயல் வடிவேலு பாடியுள்ள 'டீசெண்டான ஆளு' மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியானது!

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்துள்ள 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில், வடிவேலு பாடியுள்ள நான் டீசெண்டான ஆளு பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
 

Share this Video

நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகர் வடிவேலு ஹீரோ அவதாரம் எடுத்துள்ள, 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' திரைப்படம், டிசம்பர் 9 ஆம் தேதி, உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

அந்த வகையில், ஏற்கனவே இந்த படத்தில் இடம் பெற்ற, முதல் சிங்கிள் பாடலான அப்பத்தா பாடல் மற்றும் இரண்டாவது சிங்கிள் பாடலான பணக்காரன் பாடல் ஆகியவை நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சற்று முன்னர் மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை சந்தோஷ் நாராயணன் இசையில் வடிவேலு பாடியுள்ளார். மிகவும் இந்த பாடல் ரெகார்ட் செய்யப்பட்டபோது இடம்பெற்ற காட்சிகள் இதில் வெளியாகியுள்ளது.

வடிவேலுவின் புதிய காமெடி காட்சிகளை கண்டு ரசிக்க தயாராகியுள்ள அவரது ரசிகர்களுக்கு, 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' திரைப்படம் கண்டிப்பாக காமெடி விருந்தாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வடிவேலு ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படத்தில், ஷிவானி, ஷிவாங்கி, ராமர், ரெட்டின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், ராவ் ரமேஷ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Video