எட்டனா இருந்தா எட்டூரும் என் பாட்ட கேட்கும் - அதே பாடி லாங்குவேஜ் உடன் பாட்டுப்பாடி அசத்திய வடிவேலு
எல்லாமே என் ராசா தான் படத்துக்காக எட்டனா இருந்தா எட்டூரும் என் பாட்ட கேட்கும் என்கிற பாடலை வடிவேலு பாடி அசத்திய வீடியோ வைரலாகி வருகிறது.
நகைச்சுவை நடிகர் வடிவேலு, தற்போது தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்து அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருவது மட்டுமின்றி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திற்காக பாடல் ஒன்றையும் பாடி உள்ளார். வடிவேலுவின் குரலில் இதற்குமுன் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தவை.
அதிலும் எல்லாமே என் ராசா தான் படத்துக்காக அவர் பாடிய எட்டனா இருந்தா எட்டூரும் என் பாட்ட கேட்கும் என்கிற பாடல் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வடிவேலு, அப்பாடலை அதே பாடி லாங்குவேஜ் உடன் பாடி அசத்தி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.