'வாழை' படத்தில் இருந்து வெளியான ஒத்த சட்டி சோறு... 3-ஆவது லிரிக்கல் பாடல்!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வாழை படத்தில் இடம்பெற்றுள்ள 'ஒத்த சட்டி சோறு' லிரிக்கல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 

Share this Video

கடந்த ஆண்டு வெளியான, மாமன்னன் படத்தை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வாழை'. கிராமத்து கதையம்சத்துடன் கூடிய கதையோடு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், கலையரசன் கதாநாயகனாக நடிக்க, நிகிலா விமல் கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றொரு நாயகியாக திவ்யா துரைசாமி நடித்துள்ளார்.

இதுவரை மாரி செல்வராஜ் இயக்கிய படங்களை விட வித்தியாசமான கதைக்களத்தில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள 3-ஆவது சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 'ஒத்த சட்டி சோறு' என துவங்கும் இந்த பாடல் அன்பு, உழைப்பு, போன்ற ஏழைகளின் வலியை உணர்த்தும் விதத்தில் உள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த பாடல் இதோ.. 

Related Video