இப்படி ஒரு மாஸ் சீனை 'வாத்தி' படத்தில் இருந்து தூக்கிட்டாங்களே..! வெளியான டெலீட்டட் சீன்..!

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான, 'வாத்தி' படத்தின் டெலீட்டட் சீன் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
 

Share this Video

இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், வெளியான திரைப்படம் 'வாத்தி'. கடந்த மாதம் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து. மேலும் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது. 

தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான இந்த படத்தில், நடிகை சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருந்தார். மாணவர்களுக்கு படிப்பு என்பது எந்த அளவிற்கு முக்கியம் என்பதை வலியுறுத்தும் விதமாக , சமூக கருத்துடன் இப்படம் வெளியாகி பாராட்டுகளை குவித்தது. இப்படத்தில் வெளிப்படுத்தும் விதமாக இப்படத்தை இயக்கியிருந்தார் வெங்கி அட்லூரி. இந்த படத்தில் சமுத்திரக்கனி கென் கருனாஸ் போன்ற பல முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறாமல் போன காட்சியை படக்குழுவினர் சமூக வலைத்தளத்தில் வெளியிட... இப்படி ஒரு மாஸ் காட்சி இடம்பெறாமல் போனதே என தனுஷின் ரசிகர்கள் இந்த காட்சியை தாறுமாறாக வைரலாக்கி வருகிறார்கள்.

YouTube video player

Related Video