
தனுஷின் 'வாத்தி' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'நாடோடி மன்னன்' லிரிக்கல் பாடல் வெளியானது! வீடியோ..
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'வாத்தி' படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட், என ரவுண்டு கட்டி நடித்து வரும் நடிகர் தனுஷ், நேரடி தெலுங்கு மற்றும் தமிழில் நடித்துள்ள திரைப்படம் 'வாத்தி'. பிப்ரவரி 15ஆம் தேதி, இந்த திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில்... இப்படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டாவது சிங்கிள் பாடலான 'நாடோடி மன்னன்' பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரகனி, சாய்குமார், ஆடுகளம் நரேன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.தனுஷ் நேரடி தெலுங்கு திரைப்படத்தில் முதல் முறையாக நடித்துள்ளதால், இப்படத்திற்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
'வாத்தி' படத்தில் இருந்து வெளியான முதல் சிங்கிள் பாடலான 'வா வாத்தி' பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாவது சிங்கிள் பாடலுக்கும் அதே அளவிலான வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சித்தாரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் வெங்கி ஆடலூரி இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.