கணக்கு வாத்தியாரான தனுஷ்: வாத்தி இசை வெளியீடு!

தனுஷ் மற்றும் சம்யுக்தா மேனன் முன்னணி ரோலில் நடித்துள்ள வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் மிக பிரமாண்டமாக நடந்துள்ளது.

First Published Feb 4, 2023, 9:02 PM IST | Last Updated Feb 4, 2023, 9:02 PM IST

துள்ளுவதோ இளமை என்ற படம் மூலமாக நடிகராக அறிமுகமான தனுஷ் தற்போது நடிகர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளராகவும் திகழ்கிறார். தமிழ் மட்டுமின்றி ஹிந்தி மற்றும் இங்கிலிஸ் ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவிலும் நேரடியாக கால் பதித்துள்ளார். தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி உள்ள வாத்தி என்ற படத்தில் வாத்தியாராக பாலமுருகன் என்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். இவர்கள் தவிர, சமுத்திரக்கனி, சாய்குமார், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளதுர். வாத்தி படம் வரும் 17 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இன்று வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் மிகவும் பிரமாண்டமாக நடந்துள்ளது. வாத்தி இசை வெளியீட்டு விழாவிற்கு தனுஷ் முறுக்கு மீசை தாடியுடன், பட்டு வேஷ்டியில் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா உடன் வருகை தந்துள்ளார்.

தனுஷ் ஒவ்வொரு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் வாத்தி படத்தில் இடம் பெற்றுள்ள மொத்த பாடல்களும் வெளியிடப்பட்டுள்ளது. வா வாத்தி, நாடோடி மன்னன், கலங்குதே, ஒன் லைஃப், சூரிய பறவைகளே ஆகிய பாடல்கள் வாத்தி படத்தில் இடம் பெற்றுள்ளது.

வா வாத்தி பாடலை ஸ்வேதா மேனன் பாடியுள்ளார். இந்தப் பாடலுக்கு தனுஷ் பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார். நாடோடி மன்னன் பாடலை அந்தோனி தாசன் பாடியிருக்கிறார். யுகபாரதி பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார். கலங்குதே பாடலை விஜய் யேசுதாஸ் பாடியிருக்கிறார். யுகபாரதி பாடல் வரிகள் கொடுத்துள்ளார். ஒன் லைஃப் பாடலை ஸ்டீபன் ஷெரையா மற்றும் அறிவு பாடியுள்ளனர். தனுஷ் மற்றும் அறிவு பாடல் வரிகள் அமைத்துள்ளனர். சூரிய பறவைகளே என்ற பாடலை திப்பு மற்றும் ரவி ஜி பாடியுள்ளனர். யுகபாரதி பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார்.

Video Top Stories