Ponniyin Selvan sneak peek: வீரபாண்டியன் தலையறுத்து கொன்ற சோழ மன்னர்கள் உயிரெடுக்க துடிக்கும் பாண்டியர்கள்!
வீர பாண்டிய மன்னன் தலையை கொய்து, கொன்ற சோழ மன்னனான ஆதித்த கரிகாலன், அருண் மொழி வர்மன் உள்ளிட்ட சோழ மன்னர்களை கொள்வோம் என, பாண்டியர்கள் சூளுரைக்கும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
மணிரத்தினம் இயக்கியுள்ள, 'பொன்னியின் செல்வன்' திரைப்படம்... செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரோமோஷன் ஒரு பக்கம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், படத்தின் மீதான, எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாக இந்த படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது. பாண்டிய மன்னனான வீர பாண்டியன் தலையை கொய்து போர்க்களத்தில் சாகடிக்கும் சோழ மன்னனான ஆதித்த கரிகாலன், உட்பட சோழ மன்னர்களை கொள்வோம் என வீர பாண்டியன் மகன் முன்பு பாண்டியர்கள் காட்டுக்குள் சூளுரைக்கும் வீடியோ தான் தற்போது வெளியாகியுள்ளது.