குடும்பத்தின் சம்பவத்தோடு ஒப்பிட்டு பேசுவது மாமன் படத்தின் வெற்றியாகும் - நடிகர் சூரி பேட்டி

Share this Video

"மாமன்" படத்தில் முதல் பாதியில் அதிகமான நகைச்சுவை காட்சியும், இரண்டாம் பாதியில் அதிக உணர்ச்சிபூர்வமான காட்சிகள் உள்ளது.இந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் குடும்பத்தில் நடந்த சம்பவத்தோடு ஒப்பிட்டு பேசுவது "மாமன்" படத்தினுடைய வெற்றியாக உள்ளது.எனது அடுத்த படம் ஆக்சன், எமோஷனல் கலந்த படமாக இருக்கும். நடிகர் சிவகார்த்திகேயனோடு மீண்டும் காமெடி படத்தில் இணைந்து நடிக்க சொன்னால் அவரே என்னை அழைத்துக் கொள்ள மாட்டார். அடுத்த படத்தில் இருவருக்கும் சரிசமமான கதாபாத்திரம் இருந்தால் மட்டுமே இருவரும் இணைந்து நடிக்கலாம் என சிவகார்த்திகேயன் ஏற்கனவே என்னிடம் கூறியுள்ளார். அப்படி ஒரு கதை அமைந்தால் கண்டிப்பாக நாங்கள் இருவரும் இணைந்து நடிப்போம்.

Related Video