உதயநிதி நடித்துள்ள 'கண்ணை நம்பாதே' படத்தில் இருந்து வெளியான குருகுரு லிரிக்கல் பாடல்! வீடியோ..

நடிகரும், அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள 'கண்ணை நம்பாதே' படத்தில் இருந்து குறுகுறு பாடல் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
 

Share this Video

தமிழில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மு.மாறன். இந்த படத்தை தொடர்ந்து, தற்போது இவர் இரண்டாவதாக நடிகர் உதயநிதி ஸ்டாலினை வைத்து இயக்கி முடித்துள்ள திரைப்படம் 'கண்ணை நம்பாதே'.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில், உதயநிதி ஜோடியாக நடிகை ஆத்மிகா நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் மஹிமா நபி யார்நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்த படத்தில் இடம் பெற்றுள்ள குருகுரு காதல் பாடல் வெளியாகி உள்ளது. இப்படம் மார்ச் 17ஆம் தேதி, திரையரங்கில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Related Video