ஆக்ஷன் திரில்லராக வெளியான உதயநிதியின் கழகத் தலைவன் டீசர் இதோ..

தற்போது கழக தலைவன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த படம் அரசியல் படம் அல்ல ஆக்சன் திரில்லர் படமாக இருக்கும் என இயக்குனர் மகிழ் திருமேனி முன்னதாக தெரிவித்திருந்தார்

Share this Video

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மகனான உதயநிதி ஸ்டாலின், ஆதவன் படத்தில் காமியோ ரோலில் நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகமானார். பிரபல தயாரிப்பாளரான இவர் முதல் முதலாக ஒரு கல் ஒரு கண்ணாடி என்னும் படத்தில் நாயகராக நடித்தார். இதை தொடர்ந்து பல காமெடி படங்களில் நடித்து விட்டார்.

இவர் எம்எல்ஏ ஆன பிறகு நெஞ்சுக்கு நீதி என்னும் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சமீபத்தில் வெளியாகிய ரசிகர்களின் பேராதரவை பெற்றிருந்தது. சாதிய வேறுபாடு மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமை குறித்த கதைக்களத்தை இந்த படம் கொண்டிருந்தது. தற்போது கழக தலைவன், மாமன்னன் என இரு படங்களில் நடித்து முடித்துள்ளார் உதயநிதி. இதில் மாமன்னன் படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார்.

தற்போது கழக தலைவன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த படம் அரசியல் படம் அல்ல ஆக்சன் திரில்லர் படமாக இருக்கும் என இயக்குனர் மகிழ் திருமேனி முன்னதாக தெரிவித்திருந்தார். இந்த படத்தில் முழு பணிகளும் முடிந்து விட்டதாகவும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருவதாகவும் மகிழ் தெரிவித்திருந்தார். படத்தின் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். இதன் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

Related Video