நம்ப ஆட்டத்தை டோட்டலா கலைச்சி ஆடுனது அவன் தான்..! பரபரப்பு கட்சிகளோடு வெளியான 'கலகத் தலைவன்' ட்ரைலர்!

மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'கலகத் தலைவன்' படத்தின் டிரைலர் சற்று முன் வெளியானது.
 

Share this Video

நடிகர், சட்டமன்ற உறுப்பினர், தயாரிப்பாளர், விநியோகஸ்தார், என பன்முகத்தோடு விளங்கும்.. உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசியாக வெளியான 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்த மாதம் நவம்பர் 18 ஆம் தேதி வெளியாக உள்ள 'கலகத் தலைவன்' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தை மீகாமன், தடையறை தாக்கு, தடம், போன்ற வித்தியாசமான படங்களை இயக்கிய, மகிழ் திருமேனி இயக்கியுள்ளர். உதயநிதிக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் கலையரசன், பிக்பாஸ் ஆரவ் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அரோல் கரோலின் இசையமைத்துள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விரைவில் வெளியாக உள்ள இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இப்படம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜர்னரில் உருவாகியுள்ளது இந்த ட்ரைலரை பார்க்கும் போதே தெரிகிறது.

Related Video