watch : விடிவி சிம்பு வீட்டில் ஆத்மிகா உடன் ரொமான்ஸ் பண்ணிய உதயநிதி - வைரலாகும் கண்ணை நம்பாதே பாடல்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் கண்ணை நம்பாதே படத்தில் இடம்பெறும் காத்திரு என்கிற ரொமாண்டிக் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

First Published Mar 15, 2023, 3:34 PM IST | Last Updated Mar 15, 2023, 3:34 PM IST

இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை இயக்கிய மு.மாறன் அடுத்ததாக இயக்கியிருக்கும் படம் கண்ணை நம்பாதே. உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்திருக்கிறார். மேலும் பிரசன்னா, ஸ்ரீகாந்த், பூமிகா, வசுந்தரா, சதீஷ், சுபிக்‌ஷா, பழ கருப்பையா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

இப்படம் வருகிற மார்ச் 17-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திற்கான புரமோஷன் பணிகள் ஒருபக்கம் படு ஜோராக நடைபெற்று வரும் நிலையில், தற்போது அப்படத்தின் பாடல் ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. காத்திரு என்கிற ரொமாண்டிக் பாடலின் லிரிக்கல் வீடியோவை தான் தற்போது வெளியிட்டுள்ளனர். 

சித்து குமார் இசையமைத்துள்ள இப்பாடலை லக்‌ஷ்மிகாந்த் பாடி இருக்கிறார். இதன் லிரிக்கல் வீடியோவில் ஆத்மிகா, உதயநிதி இடையேயான ரொமாண்டிக் காட்சிகளும் இடம்பெற்று உள்ளன. விடிவி படத்தில் வரும் சிம்புவின் வீட்டில் தான் இந்த காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கின்றன. இந்த பாடல் தற்போது யூடியூப்பில் வைரலாகி வருகிறது.

Video Top Stories