Asianet News TamilAsianet News Tamil

ஆஷ்னா சவேரியுடன் 'உச்சிமாலை காத்தவராயன்' ஆல்பம் பாடலுக்கு இறங்கி குத்திய மாகாபா மற்றும் தொகுப்பாளர் விஜய்!

சரிகம'வின் ஒரிஜினல்ஸ் 'உச்சிமலை காத்தவராயன்' எனும் சுயாதீன பாடலுக்கான காணொளி வெளியீடு
 

First Published Nov 21, 2022, 10:58 PM IST | Last Updated Nov 21, 2022, 10:58 PM IST

இசையுலகில் தன்னிகரற்றுத் திகழும் சரிகம,  'உச்சிமலை காத்தவராயன்..' எனும் ஆல்பம் பாடலை தற்போது வெளியிட்டுள்ளது.

இசையமைப்பாளர் ஆனிவி இசையில் தயாராகி இருக்கும் 'உச்சிமலை காத்தவராயன்' ஆல்பம் பாடலை இசையமைப்பாளரான ஆனிவி எழுத, இசையமைப்பாளரும், பாடகருமான ஜெஸ்ஸி கிப்ட்டுடன் இணைந்து ஆனிவி பாடியிருக்கிறார். ''பின்னால வந்த எவனும்  வெளங்குனதில்ல..' என தொடங்கும் இந்த பாடலில் நடிகர்கள் மா. கா. பா. ஆனந்த், ஆர். ஜே. விஜய், நடிகை ஆஷ்னா சவேரி ஆகியோர் நடனமாடி இருக்கிறார்கள். இந்த பாடலை டோங்கிலி ஜம்போ இயக்கியிருக்கிறார், இந்தப் பாடலுக்கான நடனத்தை நடன இயக்குநர் சாண்டி அமைக்க, மல்லிகா அர்ஜுன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

'உச்சிமலை காத்தவராயன்' எனும் இந்த ஆல்பம் பாடல் ரசிகர்களிடத்தில் அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்த, இந்தக் குழு, வெகுஜன மக்களிடத்தில் ஏகோபித்த ஆதரவுடன் இன்றும் வலம் வரும் 'பட்டிமன்றம்' எனும் விசயத்தை கையிலெடுத்து விளம்பரப்படுத்தியது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், இந்தப் பாடலின் காணொளி இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

இறங்கி குத்தாட்டம் போட்டுள்ள மா.கா.பா ஆனந்த், ஆர். ஜே. விஜய், ஆஷ்னா ஜாவேரி மூவரின் தோற்றமும், நடனமும், பாடலும் ரசிகர்களை பெரிதாக கவர்ந்திருக்கிறது.
 

Video Top Stories