Asianet News TamilAsianet News Tamil

Vijay : கள்ளக்குறிச்சி.. காலில் விழுந்து கதறிய பெண்.. கலங்கி நின்ற TVK தலைவர் தளபதி விஜய் - வைரல் வீடியோ!

Thalapathy Vijay : கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் உட்கொண்ட 40க்கும் மேற்பட்ட நபர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் பல அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் சிலரது உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்குமோ என்கின்ற அச்சமும் ஏற்பட்டு வருகிறது. 

ஏற்கனவே தளபதி விஜய் உட்பட பல அரசியல் தலைவர்கள், இது திமுகவின் அலட்சியத்தால் ஏற்பட்ட அவலம் என்று முதல்வர் ஸ்டாலினை குற்றம்சாட்டி வருகின்ற இந்த நிலையில் தளபதி விஜய் அவர்கள் நேரடியாக கள்ளக்குறிச்சிக்கு சென்று அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 

அப்பொழுது அங்கு வந்த ஒரு பெண், தளபதி விஜய் அவர்களின் காலில் விழுந்து கதறிய காட்சிகள் மனதை நெகிழச் செய்யும் வண்ணம் இருந்தது. இறந்தவர்களுடைய குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறிய தளபதி, சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறினார். இனிமேல் இது போன்ற விஷயங்கள் நடக்காமல் தமிழக அரசு பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் ஒரு பதிவில் கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக CBI விசாரணை நடத்த வேண்டும் என்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் ஒன்றை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories