VIDEO : விபத்தை ஏற்படுத்திய TTF வாசன்! உடைந்து சிதறிய காரின் முன்பகுதி!

பிரபல யூடியூபரும் தமிழ் சினிமாவில் புதிதாக வெளி வர இருக்கும் மஞ்சள் வீரன் படத்தின் கதாநாயகன் டிடிஎப் வாசன் வந்த கார் சென்னையில் திடீரென விபத்துள்ளானது .
 

Share this Video

டிடிஎஃப் வாசன் சமூகவலைத்தளத்தில் பைக் ரேஸ் மூலம் பிரபலமானவர். இவரை போல பைக் ரேஸ், பைக் ரைட் விரும்பிகள் பலர் இவரை பின்தொடர்ந்து வருகிறார்கள். அவ்வப்போது இவர் பல சர்ச்சைகளில் சிக்கி காவல் நிலையத்திற்கு சென்று கேஸ்க்கு மேல் கேஸ் வாங்கி உலா வரும் ஒருவராக இருக்கிறார்.

இந்த நிலையில், சென்னை அமைந்தகரை அருகே டிடிஎஃப் வாசன் சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது. பின், அவர் அந்த காரில் இருந்து இறங்கி ஆட்டோவில் ஏறி சென்றுள்ளார். பெரிய அளவு ஏதும் சேதம் ஏற்படவில்லை என்று தெரிகிறது. 

டிடிஎஃப் வாசன் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் முதல் போஸ்டர் அண்மையில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதனால், மஞ்சள் வீரன் படப்பிடிப்புக்காக சென்னையில் முகாமிட்டுள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது

இது குறித்து அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Video