Follow us on

  • liveTV
  • ப்ரோமோஷனில் பட்டையை கிளப்பும் டாப் ஸ்டார்.. விரைவில் வெளியாகும் அந்தகன் - ஸ்பெஷல் ப்ரோமோ வீடியோ!

    Ansgar R  | Published: Aug 1, 2024, 11:06 PM IST

    தல, தளபதி என்கின்ற சண்டை ரசிகர்களுக்கு மத்தியில் ஏற்படுவதற்கு முன்பாகவே, தமிழ் திரையுலகில் "டாப் ஸ்டார்" என்ற பட்டத்தோடு வலம் வந்து கொண்டிருந்த மெகா ஹிட் நடிகர் தான் பிரசாந்த். இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக மாறியுள்ளது. கோலிவுட் திரை உலகை பொருத்தவரை சண்டை பயிற்சி, நடனம், குதிரை ஏற்றும் என்று பல கலைகளை தொழில் முறையாக கற்றுக்கொண்டு திரைத்துறைக்கு வந்த வெகு சில நடிகர்களில் பிரசாந்தும் ஒருவர். 

    ஆனால் அவருடைய குடும்ப சூழல் காரணமாக கடந்த பல ஆண்டுகளாக திரைத்துறை பக்கமே அவர் வராமல் இருந்தார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். தற்பொழுது தளபதி விஜயின் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார். 

    அதே நேரம் ஏற்கனவே இந்தி மற்றும் மலையாள மொழியில் எடுக்கப்பட்டு, மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக மாறிய "அந்தகன்" என்கின்ற திரைப்படத்தை தமிழில் பிரசாந்த் ரீமேக் செய்துள்ளார். இந்த திரைப்படத்தை அவரது தந்தை தியாகராஜன் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் அப்படத்தில் இருந்து ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

    Read More

    Video Top Stories

    Must See