Asianet News TamilAsianet News Tamil

பதைபதைக்க வைக்கும் ரயில் காட்சி... அசால்ட் பண்ணிய டாம் குரூஸ் - மிரட்டலான மிஷன் இம்பாசிபிள் 7 மேக்கிங் வீடியோ

டாம் குரூஸ் நடிப்பில் உருவாகி உள்ள ‘மிஷன் இம்பாசிபிள் - டெட் ரெகானிங் பாகம் 1’ படத்தின் மேக்கிங் வீடியோ யூடியூப்பில் வெளியாகி வைரலாகி வருகிறது.

First Published Jul 6, 2023, 4:07 PM IST | Last Updated Jul 6, 2023, 4:07 PM IST

ஹாலிவுட் படங்களில் தன்னுடைய அதிரடியான நடிப்பால் உலகளவில் ரசிகர்களை சம்பாதித்து வைத்துள்ளவர் டாம் குரூஸ். இவர் படங்களில் இடம்பெறும் ஸ்டண்ட் காட்சிகள் பெரும்பாலும் ரியலாகவே படமாக்கப்படும். தற்போது 60 வயதானாலும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ரிஸ்க் ஆன சண்டைக்காட்சிகளில் அசால்டாக நடித்து அதகளம் செய்து வருகிறார் டாம் குரூஸ்.

அந்த வகையில் அவர் நடிப்பில் தற்போது ‘மிஷன் இம்பாசிபிள் - டெட் ரெகானிங் பாகம் 1’ திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படம் வருகிற ஜூலை 14-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சியுள்ள நிலையில், தற்போது அப்படத்தில் இடம்பெறும் டாம் குரூஸ் ரெயிலின் மீது சண்டையிடும் காட்சி எப்படி படமாக்கப்பட்டது என்பது குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

பார்க்கும் நமக்கே பதைபதைக்க வைக்கும் இந்த ஸ்டண்ட் காட்சியை அசால்டாக செய்து அசத்தி இருக்கிறார் டாம் குரூஸ். மிகவும் ரிஸ்க் ஆன பாதையில் படமாக்கப்பட்டுள்ள இந்த காட்சியின் மேக்கிங் வீடியோ தற்போது யூடியூப்பில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் வகையில் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.