கமல் 65ஐ கொண்டாடிய Thug Life படக்குழு.. யங் பாய் போல கத்தி கூச்சலிட்டு உற்சாகப்படுத்திய மணிரத்னம்! Viral Video

Kamal Haasan 65 : கடந்த 1960ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி வெளியான படம் தான் களத்தூர் கண்ணம்மா. அந்த படத்தில் நடித்து அறிமுகமான நடிகர் தான் உலக நாயகன் கமல்ஹாசன்.

Share this Video

இந்திய திரை உலகின் மணிமகுடமாகவும், தமிழ் சினிமாவின் பெருமையாகவும் கடந்த 65 ஆண்டுகளாக இயக்குனராக, நடிகராக, டான்ஸ் மாஸ்டராக, இசையமைப்பாளராக, வசனகர்த்தாவாக, தயாரிப்பாளராக, பாடகராக, விநியோகஸ்தராக இன்னும் பல திறன் கொண்ட நடிகராக பயணித்து வரும் ஒரு திரை கலைஞன் தான் உலக நாயகன் கமல்ஹாசன். 

கடந்த 1954ம் ஆண்டு பிறந்த இந்த பெரும் கலைஞன் தனது ஆறாவது வயது முதல் திரைத்துறையில் பயணித்து வருகிறார். எண்ணற்ற சாதனைகளை சினிமாவில் படைத்துள்ள உலக நாயகன் கமல்ஹாசன், தற்பொழுது தனது திரை பயணத்தில் 64 ஆண்டுகளை நிறைவு செய்து, தனது 65வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார். 

இந்நிலையில் களத்தூர் கண்ணம்மா முதல் தக் லைப் திரைப்படம் வரை அவர் பயணித்த சினிமா வாழ்க்கையை கொண்டாடும் வகையில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் Thug Life திரைப்பட குழுவினர், பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்து உலகநாயகன் கமல்ஹாசனை கொண்டாடியுள்ளனர். 

Related Video