Asianet News TamilAsianet News Tamil

அடடா... சோகத்திலும், ரொமான்ஸிலும் புகுந்து விளையாடிய லெஜெண்ட் சரவணனின் 'கொஞ்சி கொஞ்சி' வீடியோ பாடல் வெளியானது!

லெஜெண்ட் சரவணன் நடிப்பில் வெளியான 'தி லெஜெண்ட்' படத்தில் இடம்பெற்ற கொஞ்சி கொஞ்சி வீடியோ பாடல் தற்போது வெளியாகியுளளது.
 

தொழிலதிபராக அனைவராலும் அறியப்பட்ட லெஜெண்ட் சரவணன், கடந்த ஆண்டு... அதிரடியாக ஹீரோவாக களமிறங்கினார். இவர் நடித்த விளம்பர படங்களை இயக்கிய, இரட்டை இயக்குனர்களான ஜேடி - ஜெர்ரி இந்த படத்தை இயக்கி இருந்தனர். 

இப்படம் வசூல் ரீதியாக... எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெற வில்லை என்றாலும் தற்போதைய சமூகத்திற்கு ஏற்ற, தரமான கருத்தை அழுத்தமாக பதித்திருந்த திரைப்படம் என பாராட்டுக்களை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற 'கொஞ்சி கொஞ்சி' பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலில் தலைவர் ரொமான்ஸ்... சோகம் என கலவையான பர்மாமென்சில் மிரட்டி உள்ளார் பாருங்க.
 

Video Top Stories