செம்ம எனர்ஜியுடன் இறங்கி ஆடிய விஜய்... ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ரஞ்சிதமே வீடியோ சாங் வந்தாச்சு

வம்சி இயக்கிய வாரிசு படத்தில் தமன் இசையில் விஜய் பாடிய ரஞ்சிதமே பாடலின் வீடியோவை படக்குழு யூடியூப்பில் வெளியிட்டு உள்ளது. 

Share this Video

நடிகர் விஜய் நடித்த வாரிசு படம் கடந்த மாதம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆனது. வம்சி இயக்கிய இப்படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷியாம், கணேஷ் வெங்கட் ராம், சம்யுக்தா, சங்கீதா, எஸ்.ஜே.சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.

தில் ராஜு தயாரித்திருந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வசூல் சாதனை நிகழ்த்தியது. 25 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி வரும் வாரிசு திரைப்படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. கடந்த சில தினங்களாக வாரிசு படத்தின் வீடியோ பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தற்போது இப்படத்தில் விஜய்யும், மானசியும் இணைந்து பாடிய ரஞ்சிதமே பாடல் ரிலீஸுக்கு முன்பு எந்த அளவு வரவேற்பை பெற்றதோ, அதே அளவு வரவேற்பு படத்தில் இடம்பெற்ற அப்பாடலின் வீடியோவுக்கும் கிடைத்திருந்தது. அதில் விஜய்யும், ராஷ்மிகாவும் சேர்ந்து செம்ம எனர்ஜியுடன் ஆடி இருந்தனர்.

அப்பாடல் வீடியோ எப்போது ரிலீஸ் ஆகும் என ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது குட் நியூஸ் கிடைத்துள்ளது. அதன்படி தற்போது ரஞ்சிதமே பாடல் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். வெளியான 2 மணிநேரத்திலேயே அப்பாடல் 3.5 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை பெற்று யூடியூப்பில் டிரெண்டாகி வருகிறது.

Related Video