'Badass' ஒவ்வொரு வரியும் சும்மா பட்டாசா வெடிக்குதே.. அனிரூத் குரலில் வெளியான 'லியோ' செகண்ட் சிங்கிள் பாடல்!

லியோ படத்தில் இடம்பெற்ற இரண்டாவது சிங்கிள் பாடல் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வெளியாகி... சும்மா பட்டையை கிளப்பி வருகிறது.
 

Share this Video

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ திரைப்படம், பான் இந்தியா படமாக வரும் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அவ்வப்போது படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. இந்நிலையில், நேற்று... லியோ படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது சிங்கிள் பாடலான 'badass' பாடல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வெறித்தனமாக ரசிக்கப்பட்டு வருகிறது. 

அனிரூத் இசையமைத்து பாடியுள்ள இந்த பாடலின் வரிகள் சும்மா பட்டாசாய் வெடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Related Video