Watch: 'லியோ' படத்தில் தளபதி விஜய்யின் குரலில்... தெறிக்கவிடும் 'நா ரெடி' புரோமோ!

தளபதி பிரிந்த நாளுக்கு லியோ படத்தில் இடம்பெற்றுள்ள முதல் சிங்கிள் பாடலான 'நா ரெடி' பாடல் வெளியாக உள்ள நிலையில், தற்போது இந்த பாடலின் புரோமோ வெளியாகி சும்மா அதிர வைத்துள்ளது.
 

Share this Video

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் தற்போது நடித்துள்ள திரைப்படம் 'லியோ'. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விரைவில் ஆரம்பமாக உள்ள நிலையில், கடந்த வாரம்... தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு, 'நா ரெடி' பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், வெளியாக உள்ள இந்த பாடலின் புரோமோவை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த பாடலை தளபதி விஜய், அனிருத் மற்றும் அசல் கோளாறு ஆகியோருடன் இணைந்து பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அனிருத் இசையில் விஷ்ணு இடவன் என்பவர் இந்த பாடலை எழுதியுள்ளார். ராப் வெர்ஷனை அசல் கோளார் எழுதி பாடியும் உள்ளார். தற்போது வெளியாகியுள்ள இந்த புரோமோ, வெளியான சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கான ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Video