தளபதி அதிரடியில் பொளந்து கட்டும் Beast Mode வீடியோ பாடல் வெளியானது!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தில் இருந்து, பீஸ்ட் மோடு பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

First Published May 9, 2023, 9:01 PM IST | Last Updated May 9, 2023, 9:01 PM IST

தளபதி விஜய் நடிப்பில், கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கியிருந்தார். விஜய் ராணுவ வீரராக நடித்திருந்த இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்தார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், செல்வராகவன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, டிடிவி கணேஷ், அபர்ணாதாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையில், இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சற்று முன்னர் விவேக் பாடல் வரிகளில்.. அனிருத் பாடி இசையமைத்த பீஸ்ட் மோட் பாடல் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. தளபதியின் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே, ஆயிரக்கணக்கான பார்வையாளர்களால் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.

Video Top Stories