இளம் நடிகருடன் இணைந்த ஜேசன் சஞ்சய்; அதிரடியாக வெளியான மோஷன் போஸ்டர்!

Jason Sanjay : பிரபல நடிகர் மற்றும் அரசியல் தலைவர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சயின் முதல் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் இப்பொது வெளியாகியுள்ளது.

Share this Video

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் பயணித்து வருகின்றார் தளபதி விஜய். விரைவில் சினிமாவை விட்டு விலகி, அவர் அரசியல் களம் செல்ல உள்ள நிலையில் தன்னுடைய இறுதி திரைப்படத்தில் அவர் இப்போது நடித்து வருகிறார். இந்த சூழலில் பிரபல லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்தின் மூலம், இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார் தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய். அந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் சந்தீப் கிசன் நாயகனாக நடிக்கும் நிலையில், அப்பட்டத்தின் முதல் மோஷன் போஸ்டர் தற்பொழுது வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video