விஜய் படம் சக்சஸ்... அடுத்தது அஜித்துடன் கூட்டணியா? - திருவண்ணாமலை கோவிலில் வாரிசு இயக்குனர் வம்சி பேட்டி

திருவண்ணாமலை கோவிலில் சாமி தரிசனம் செய்த இயக்குனர் வம்சி, விஜய்யுடன் படம் எடுத்தாச்சு, அடுத்தது அஜித்துடன் எப்போது கூட்டணி அமைப்பீர்கள் என்கிற கேள்விக்கு பதிலளித்தார்.

Share this Video

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் வாரிசு திரைப்படத்தின் இயக்குனர் வம்சி பைடிபல்லி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். கோவிலில் உள்ள அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், நவகிரகங்கள் உள்ளிட்ட கோவிலின் பல்வேறு பிரகாரங்களில் வலம் வந்து தனது குடும்பத்துடன் வம்சி சாமி தரிசனம் மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் கோவில் சார்பில் இயக்குனர் வம்சிக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு கோவிலின் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பேசிய, இயக்குனர் வம்சி வாரிசு திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்றும், வாரிசு திரைப்படத்திற்கு தமிழக மக்கள் வெற்றியை பெற்று கொடுத்துள்ளனர் எனவும், மக்கள் தனக்கு அளித்த ஆதரவிற்கு மனமார்ந்த நன்றி என்றும் கூறினார்.

அதேபோல் விஜய்யுடன் படம் எடுத்தாச்சு, அடுத்தது அஜித்துடன் எப்போது கூட்டணி அமைப்பீர்கள் என்கிற கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த வம்சி, இது கோவில் அதைப்பற்றியெல்லாம் இங்கு பேச முடியாது என கூறிவிட்டு சென்றார்.

Related Video