AI எல்லாம் பலமா இருக்கே! உண்மையிலே யுவன் மிரட்டிவிட்டாப்ல - யங் லுக்கில் விஜய் - GOAT 3rd சிங்கிள் இதோ!

GOAT Third Single : தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் GOAT படத்தில் இருந்து மூன்றாவது சிங்கிள் பாடலான "ஸ்பார்க்" இப்பொது வெளியாகியுள்ளது.

Share this Video

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் "தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்". இது தளபதி விஜயின் 68வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த திரைப்பட பணிகளை முடித்துவிட்டு, தனது 69வது பட பணிகளை விறுவிறுப்பாக துவங்க உள்ளார் விஜய்.

இந்நிலையில் ஏற்கனவே "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படத்திலிருந்து இரண்டு சிங்கிள் பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில், தற்போது "ஸ்பார்க்" என்ற மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியிருக்கிறார், அவரோடு இணைந்து வருஷா பாலு என்பவரும் இந்த பாடலை பாடியுள்ளார். 

டீ ஏஜிங் தொழில்நுட்பத்தை இந்த பாடலில் பயன்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பயங்கரமாக, யங் லுக்கில் தோன்றும் தளபதி விஜய் அவரது ரசிகர்களுக்கு ஒரு மெகா விருந்து வைத்துள்ளார் என்றே கூறலாம்.

Related Video