வசூல் வேட்டை நடத்திய GOAT - தயாரிப்பாளரோடு கேக் வெட்டி கொண்டாடிய தளபதி! Viral Video!

GOAT Victory : கோட் திரைப்படத்தின் வெற்றியை அப்படத்தின் தயாரிப்பாளரோடு இணைந்து கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார் தளபதி விஜய்.

First Published Oct 12, 2024, 8:38 PM IST | Last Updated Oct 12, 2024, 8:38 PM IST

விரைவில் அரசியலுக்கு செல்ல உள்ள தளபதி விஜய், தனது 68வது திரைப்படமாக அண்மையில் வெளியிட்டது தான் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்". உலக அளவில் 455 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து இந்த திரைப்படம் மெகா வெற்றியை பெற்றிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 100 கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்து பெரிய சாதனை படைத்திருக்கிறது. 

"கோட்" திரைப்படம் தற்பொழுது OTT தளத்திற்கு சென்று இருந்தாலும், திரையரங்குகளில் தளபதி விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இப்படம் அமைந்தது. முதலும் கடைசியுமாக பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவோட இணைந்து தளபதி விஜய் நடித்த திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழக அளவில் 100 கோடி ரூபாயை தாண்டி GOAT திரைப்படம் வசூல் செய்ததை முன்னிட்டு அந்த வெற்றியை படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் விநியோகஸ்தருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார் தளபதி விஜய். அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

Video Top Stories