அசத்தலான நியூ லுக்கில் விஜய்; ஜோராக நடக்கும் தளபதி 69 படப்பிடிப்பு - வைரலாகும் வீடியோ!

Thalapathy 69 : பிரபல இயக்குனர் வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் தனது 69வது மற்றும் இறுதி பட பணிகளை  துவங்கியுள்ளார்.

Share this Video

இந்த ஆண்டு தொடக்கத்தில் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியினை அறிவித்த தளபதி விஜய் ஏற்கனவே தான் ஒப்புக்கொண்டுள்ள இரு திரைப்பட பணிகளை முடித்த பிறகு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதில் ஏற்கனவே கோட் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த நிலையில், தற்போது தன்னுடைய 69ஆவது மற்றும் இறுதி திரைப்பட பணிகளில் அவர் ஈடுபட்டு இருக்கிறார். பிரபல இயக்குனர் வினோத் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. அனிருத் இசையில் பிரம்மாண்டமாக அண்மையில் ஒரு பாடல் கட்சியின் பதிவு நடைபெற்று முடிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தளபதி விஜய் ஷூட்டிங்கிற்கு இடையில் தனது ரசிகர்களை சந்தித்த வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Related Video