இப்படி ஒரு டைட்டில் எதிர்பார்க்கவே இல்லையே 'லியோ '... மிரட்டல் டீஸருடன் வெளியானது தலைப்பு!

தளபதி விஜய்யின் 67 படத்தின் டைட்டில் தற்போது, ப்ரோமோவுடன்  வெளியாகி இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

Share this Video

தளபதி விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இணைந்து இரண்டாவது முறையாக நடித்து வரும், திரைப்படத்தின் பணிகள் மிகவும் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

அந்த வகையில் சற்று முன்னர், இப்படத்திற்கு 'லியோ ' என பெயர் வைத்துள்ளதாக, இப்படத்தை தயாரித்து வரும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் புரோமோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

Related Video