Asianet News TamilAsianet News Tamil

விதி என்ன விட்டு வச்சிருக்குனா அதுக்கு ஏதோ காரணம் இருக்குடா மாறா! ரத்தம் தெறிக்க வெளியான 'தலைநகரம் 2' டீசர்!

'தலைநகரம்' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது எடுக்கப்பட்டு வரும் நிலையில்... இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. 
 

First Published Dec 14, 2022, 9:29 PM IST | Last Updated Dec 14, 2022, 9:29 PM IST

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில், இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில், கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 'தலைநகரம்'. குறிப்பாக இந்த, படத்தில் நாய் சேகராக வடிவேலு செய்த காமெடி மிகவும், பிரபலம். 

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்போவதாக தகவல் வெளியானதில் இருந்தே... இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்பட்ட நிலையில், தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. 'தலைநகரம் 2' படத்தை, துரை இயக்கி உள்ளார். ரத்தம் தெறிக்க தெறிக்க இந்த படத்தின் டீசர் வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

இப்படத்தில் வடிவேலு, யோகி பாபு, பாலக் லால்வானி, தம்பி ராமையா, ரவி மரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு மது ஆர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு 2021 இல் தொடங்கப்பட்டது. தற்போது அது முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷனுக்கு நகர்த்தப்பட்டுள்ளது. படத்தின் வெளியீட்டுத் திட்டம் குறித்த விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Video Top Stories