முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தாடி பாலாஜி கொடுத்த வேறலெவல் சர்ப்ரைஸ்
முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டான்யாவின் பிறந்தநாளுக்கு திரைப்பட நடிகர் தாடி பாலாஜி வீடியோ காலில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நேரடி பார்வையில் அறுவை சிகிச்சை பெற்ற திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியை சார்ந்த சிறுமி டான்யா பிறந்தநாளுக்கு திரைப்பட நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி தொலைபேசியில் வீடியோ கால் மூலம் டான்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்
வாழ்த்துக்களை கூறிய நடிகர் தாடி பாலாஜி உனக்கு என்ன பிடிக்குமோ அது என்னிடத்தில் கேள் அதை வாங்கி வருகிறேன் என்று தெரிவித்தார் அதற்கு சிறுமி டான்யா எனக்கு பிரியாணி மிகவும் பிடிக்கும் என்று கூறினார் உனக்கு பிடித்ததை நானே நேரில் வந்து வாங்கி தருகிறேன் என நடிகர் தாடி பாலாஜி சிறுமியிடம் கூறினார்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மட்டுமே நலம் விசாரித்த நிலையில் தற்போது சினிமா வட்டாரத்தில் நடிகர் தாடி பாலாஜி சிறுமி டான்யாவிடம் பேசி உனக்கு பிடித்ததை நேரில் வந்து வாங்கி தருகிறேன் என்று கூறியிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தான்யாவின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.