காவாலா பாடலின் ஹிந்தி வெர்ஷன் 'து ஆ தில்பாரா' பாடல் வெளியிட்டு விழாவில் குத்தாட்டம் போட்ட தமன்னா! வீடியோ

ஜெயிலர் பட படத்தின் ஹிந்தி காவாலா பாடலின்,  'து ஆ தில்பாரா'  பாடல் லான்ச் இன்று நடைபெற்ற நிலையில் இதில் கலந்து கொண்ட தமன்னா, மேடையில் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
 

Share this Video

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம், வரும் ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். ஹிந்தியிலும் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ள இந்த படத்தில், தமன்னாவின் ஐட்டம் பாடலான 'காவலா' பாடலின் ஹிந்தி வெர்ஸின் லான்ச் இன்று நடைபெற்றது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மும்பையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் நடிகை தமன்னா கலந்து கொண்டு சிறப்பித்தார். அப்போது 'து ஆ தில்பாரா' பாடலுக்கு மேடையில் தமன்னா குத்தாட்டம் போட்டார். இதுகுறித்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. நாளைய தினம், 'ஜெயிலர்' படத்தின் ஆடியோ லான்ச், மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Video